உடல் எடையை குறைக்க முயலும் போது அடிக்கடி பசிக்குதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...

தற்போது அனைவரும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதற்காக டயட், உடற்பயிற்சி போன்ற பல செயல்களை தினமும் பின்பற்றுகின்றனர். இருப்பினும், டயட் மேற்கொள்ளும் போது அடிக்கடி பசியுணர்வு ஏற்படும். அதற்கு காரணம் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதில்லை என்று தான் அர்த்தம். அதுமட்டுமின்றி சிலர் உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவு சாப்பிடுவதைக் கூட நிறுத்திவிடுகின்றனர். இவ்வாறு உணவுகளை உட்கொள்ளாவிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடல் பலவீனமடைந்து, வயிற்றில் பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும். எனவே உடல் எடையை குறைக்கவும், அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கவும் ஒருசில உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். இதனால் அவை பசியுணர்வை தடுப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவி புரியும். ஏனெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. சரி, இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

அவகேடோ :
அவகேடோவில் மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இருப்பதால், இவை செரிமானத்தின் வேகத்தைக் குறைத்து, வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசியுணர்வு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.






ஓட்ஸ்:
ஓட்ஸ் மிகச்சிறந்த ஒரு காலை உணவு. அதிலும் உடல் எடையை குறைக்க முயலுவோருக்கு ஏற்ற உணவு. ஏனெனில் இதில் செரிமானத்தின் வேகத்தைக் குறைக்கும் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான பீட்டா க்ளுக்கான் உள்ளது. இதனால் பசியுணர்வு கட்டுப்படும்.


பாதாம்:
பாதாமில் உடலுக்கு வேண்டிய நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதை தடுக்கலாம்.

காபி(Coffee):
காபியில் உள்ள காப்ஃபைன் கூட பசியுணர்வைக் கட்டுப்படுத்தும். அதிலும் உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு கப் காபிக்கு மேல் குடிக்கக் கூடாது. இல்லாவிட்டால், அது உடலில் வறட்சியை ஏற்படுத்திவிடும்.


டார்க் சாக்லெட்:
கசப்பு சுவையுடைய டார்க் சாக்லெட் சாப்பிட்டாலும் பசியுணர்வு கட்டுப்படும்.







ஆளி விதை:
ஆளி விதையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இவை பசியுணர்வு கட்டுப்படுத்துவதோடு, உடல் எடை குறையவும் உதவும்.

காட்டேஜ் சீஸ்:
மற்ற சீஸை பார்க்கும் போது, காட்டேஜ் சீஸில் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. ஆகவே உணவில் காட்டேஜ் சீஸை சேர்த்துக் கொண்டால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும்.

தண்ணீர்:

குறிப்பாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் உடல் வறட்சி நீங்குவது மட்டுமின்றி, பசியுணர்வும் குறையும். மேலும் உடல் எடை குறையும் பெரிதும் உதவியாக இருக்கும்.

 
க்ரீக் தயிர்:
க்ரீக் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வது, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

 இனிப்புகள்:
இனிப்புகளை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் அதையே அளவாக சாப்பிட்டால், பசியுணர்வு கட்டுப்படும். ஆகவே தினமும் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் கொஞ்சம் இனிப்புக்களை சாப்பிடுங்கள்.



சூப்:
சூப் ஒரு சிறந்த பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருள். அதுமட்டுமின்றி, உடல் எடையை குறைக்க உதவும் உணவுப் பொருட்களிலும் ஒன்று. ஆகவே பசியுணர்வு ஏற்படும் போது சூப் குடித்தால், பசியானது கட்டுப்படும். அதனால் உணவை அளவாக சாப்பிடலாம். அதன் காரணமாகத் தான் பெரிய ஹோட்டல்களில் உணவுக்கு முன் சூப்
கொடுக்கிறார்கள்.

பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளான பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை போன்றவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களுடன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை உணவுகளை செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும்.

சாலட்:
சாலட் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். ஆகவே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு சாலட் செய்து சாப்பிட்டால், அடிக்கடி பசியுணர்வு ஏற்படாது.


இறைச்சி:
இறைச்சிகளில் புரோட்டீன் மற்றும் கொழுப்பு அதிகமாக இருப்பதால், இதனை அளவாக உட்கொண்டாலும், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.







க்ரீன் டீ:
க்ரீன் டீ, உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைக் கட்டுப்படுத்தும்.








ஆப்பிள்:
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நோய்கள் அண்டாமல் இருக்கும். அதுவும் ஆப்பிள் சாப்பிட்டால் பசியுணர்வு குறைவதோடு, வயிறும் நிறையும்.







முட்டை:
முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை நீண்ட நேரம் பசியெடுக்காமல் பார்த்துக் கொள்ளும். அதற்கு முட்டையை வேக வைத்து சாப்பிட வேண்டும்.







லஸ்ஸி:
தயிரால் செய்யப்படும் லஸ்ஸி கூட பசியைக் கட்டுப்படுத்தும். அதிலும் இதனை உணவு சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் குடித்தால், அதிகப்படியான பசியானது கட்டுப்பட்டு, அளவான உணவை உட்கொண்டு, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.