யாழ்.நகரின் புறநகர் பகுதியான கொட்டடி
பகுதியினைச்சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல்
காணாமல் போயுள்ளனர். வெள்ளியன்று யாழ்.நகரில் இடம்பெற்ற தனியார் வானொலி
நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவென சென்றிருந்த அவர்கள் பின்னர் வீடு
திரும்பவில்லை என கூறப்படுகின்றது.
இது தொடர்பில் அவர்களது
குடும்பத்தவர்களினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. ம. ஜதீசன் மற்றும் க. பிரதீபன் ஆகிய இரு மாணவர்களே
இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.