அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட கேதீஸ்வரனின் குடும்பத்தின் துயர்போக்க உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் !!!

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளியான சிவபெருமான் கேதீஸ்வரன் (36 வயது) என்ற இளம் குடும்பஸ்தர் அவுஸ்திரேலியாவில் கடந்த 16ம் திகதி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சொந்த ஊரில் ஏற்பட்ட போர் அதன் பின்னரான அச்சுறுத்தல்கள், பொருளாதார வாழ்வியல் நெருக்கடி காரணமாக தனது மனைவி மற்றும் இரண்டு சிறுபிள்ளைகளையும் உழைத்து காப்பாற்ற வேண்டுமென எண்ணி அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.
இந்த நிலையில் உயிரிழந்த தனது கணவனின் பூதவுடலை பெற்றுக்கொள்ளும் நிலைதெரியாமலும் கணவனின் மரணம் தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் தெரியாத நிலையிலும் மிகவும் துயருடன் தன் இரு சிறு குழந்தைகளோடு அந்தரித்த நிலையில் உள்ளார்.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பம் எந்தவித பணமும் இல்லாமல் ஆதரவுமில்லாமல் இருப்பதாக தெரியவருகின்றது.
எனவே இந்த குடும்பத்தின் மிகவும் துன்பநிலையை மனதில் கொண்டு எமது மண்ணில் அவலத்தை கருத்தில் எடுத்து அவுஸ்திரேலியாவில் உதவ வல்ல அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் சங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலிய கிளை என்பனவும் புலம்பெயர் தமிழ் உறவுகளும் கீழ்வரும் கொலை செய்யப்பட்ட கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த சிவபெருமான் கேதீஸ்வரனின் குடும்பத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உதவுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
தொலைபேசி இலக்கம்-.கேதீஸ்வரன் குகனேஸ்வரி- 0778183065
kethiswaran_001

kethiswaran_003