கனேடிய நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் யாழ்பணத்தைச் சேர்ந்த திருமதி
ராதிகா சிற்சபேசன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்த சுவாமி
கோவிலில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளார்.
இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் வட மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அத்துடன் வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார்.
இதன் போது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் நிலை பற்றியும் அமைச்சர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசனுக்கு எடுத்துக் கூறினார்.
இதேவேளை, யாழிலுள்ள சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கு நேற்று அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார்.
நன்றி
வீரகேசரி நாளிதழ்