சிங்கப்பூரில் தமிழர் பஸ்ஸிலிருந்து தள்ளி விட்டுக் கொலை.. வெடித்தது கலவரம் : கட்டுக்குள் வந்தது











சிங்கப்பூரில்  தேக்­கா­வில் என்ற பிரதேசத்தில் நேற்றிரவு சாலை விபத்­தில் ஒருவர் மாண்டதைத் தொடர்ந்து அங்கு கல­வ­ரம் மூண்டது. கல­வ­ரத்தை அடக்க போலி­சா­ருடன், போலிஸ் சிறப்பு நட­வ­டிக்கை தள­பத்­தி­ய­மும் கூர்க்கா படை­யி­ன­ரும் சம்பவ இடத்­துக்கு வர­வழைக்­கப்­பட்­ட­னர்.
சில மணி நேரத்தில் கல­வ­ரம் கட்­டுக்­குள் கொண்டு வரப்­ பட்டதாக பின்­னி­ரவு 12.22க்கு வெளி­யி­டப்­பட்ட போலிஸ் அறிக்கை தெரி­வித்தது. 27 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.
ரேஸ் கோர்ஸ் சாலை, ஹேம்­ஷி­யர் சாலைச் சந்­திப்­பில் நேற்­றி­ரவு கிட்­டத்­தட்ட 9.23 மணி அளவில் தனியார் பேருந்து மோதியதில் 33 வயது இந்திய நாட்டு ஊழியர் உயிரிழிந்தார்.
தகவல் அறிந்த­தும் அங்கு விரைந்த குடிமைத் தற்­காப்­புப் படை­யி­னர் ஊழியர் இறந்து விட்­ட­தா­கத் தெரி­வித்­த­னர். பேருந்­துக்கு அடியில் மாட்­டிக்­கொண்­டி­ருந்த அந்த ஊழியரின் உடலை மீட்புக் கரு­வி­கள் கொண்டு மீட்­கும்­போது, அதிகாரிகள் மீது பொருட் ­களை வீசி எறிந்து கலகக்காரர்கள் தாக்­கு­தல் நடத்­தி­னர். அங்கிருந்த வாக­னங்களைச் சேதப்படுத்­தி­யும் அதி­கா­ரி­களைக் காயப்­படுத்­தி­யும் கல­வ­ரத்­தில் ஈடு­பட்­டு­னர்.
கல­வ­ரத்­தில் மொத்தம் 10 போலிசார், -4 குடிமைத் தற்­காப்­புப் படை­யி­னர், பேருந்து ஓட்டுநர், துணை ஓட்டுநர் உட்பட, 18 பேர் காயம் அடைந்த­னர்.
மூன்று போலிஸ் வாக­னங்கள், குடிமைத் தற்­காப்பு ஆம்­பு­லன்ஸ் வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய ஐந்து வாக­னங்கள் எரிக்­கப்­பட்­டன. சம்ப­வத்­தில் குடிமைத் தற்­காப்­புப் படையைச் சேர்ந்த மொத்தம் ஒன்பது வாக­னங்கள் சேதம் அடைந்த­தாக குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. தனியார் வாக­னங்களும் சேதம் அடைந்த­தாக அறி­யப்­படுகிறது.
இந்தக் கல­வ­ரத்­தில் கிட்டத் தட்ட 400 பேர் ஈடு­பட்­ட­தாக போலிஸ் வட்­டா­ரம் தெரி­வித்­தது.
கல­வ­ரத்தைத் தொடர்ந்து பஃப்ளோ ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு சாலைகள் போக்­கு­வ­ரத் துக்கு மூடப்­பட்­டன. அப்­ப­கு­தி­யி­லுள்ள கடை­களும் மூடப்­பட்­டன. அப்­ப­கு­திக்கு பொது மக்கள் போக்­கு­வ­ரத்து தடை செய்­யப்­பட்­டது. அப்­ப­கு­தி­யில் வசிக்­கும் குடி­மக்­களும் வீடு­களில் இருக்­கக் கேட்­டுக்­கொள்­ளப்பட்­ட­னர்.
“இது ஒரு கடுமை­யான சம்ப­வம். இதில் பல­ருக்­குக் காயம் ஏற்­பட்­ட­து­டன் பொதுச் சொத்து களும் சேதப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. இதில் சம்பந்தப்­பட்­ட­வர்­களை கைது செய்ய போலிசார் அனைத்து முயற்­சி­களை­யும் மேற்­கொள்­வர்,” என்று துணைப் பிர­த­ம­ரும் உள்துறை அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன் தெரி­வித்­தார்.                        
                                                                                         
                                                                                                    கனகலதா, வீ.பழனிச்சாமி
                                                                                                    நன்றி : சிங்கபூர் முரசு செய்தி