யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது தென்மராட்சி நுணாவில் பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல்!!!

யாழ்ப்பாணத்திலிருந்து  தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது தென்மராட்சி நுணாவில் பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்தில் பயணித்த சிங்களவர்கள் தடிகள், பொல்லுகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று மாலை பயணிகளை ஏறிக் கொண்டு தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது இரவு 7 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் ஒரு பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி  சேதமடைந்துள்ளதுடன் சாரதி உள்பட சிலர் காயம் அடைந்தனர். இவ் கல்வீச்சு சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது  இப்பேருந்தில் பயணித்த சிங்கள பயணிகள் தடிகள், பொல்லுகளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்பொதுமக்கள் மீதான தாக்குதல் சம்பவம் இராணுவம் மற்றும் பொலீசார் முன்னிலையிலே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.