நெல்சன் மண்டேலா(SABC TV live ) நேரடி ஒளிபரப்பு


டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் நெல்சன் மண்டேலாவின் இறுதிச்சடங்கு, பிரிட்டன் இளவரசி டயானா, பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், போப் இரண்டாம் ஜான் பால் ஆகியோரின் இறுதிச்சடங்கைவிட பிரமாண்டமானதாக இருக்கும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் இஸ்மாயில் வாடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் லெனேசியா பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் மண்டேலாவின் மறைவுக்கான இரங்கல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட சமுதாய அமைப்பினர் பங்கேற்றனர். இதில், இஸ்மாயில் வாடி பேசியதாவது:

இசைத்துறையினர், மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என ஒட்டுமொத்த உலகத்தினரையும் கவர்ந்தவர் மண்டேலா. அரசியல், மொழி, கலாசாரம், இனத்திற்கு அப்பாற்பட்டவர்.

உலகின் எல்லாத் திசைகளிலும் மண்டேலாவின் புகழ் பரவியுள்ளது. மண்டேலா கொள்கைக்காகவே வாழ்ந்தார். அதிகாரத்தை அவர் ஒருநாளும் துஷ்பிரயோகம் செய்தது கிடையாது. தன்னலமின்றி வாழ்ந்தவர், தன்னடக்கத்துடன் நடந்து கொண்டவர் மண்டேலா என்று இஸ்மாயில் வாடி, அவருக்கு புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், கலாசார அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மண்டேலாவின் சிறப்புகளைப் பற்றி பேசினர்.