கறுப்பினத் தலைவர் மண்டேலா காலமானார் !!! பொது வாழ்க்கையில் சகாப்தம்.. தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கடம்.. மண்டேலாவின் கதை!

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இன்று காலை காலமானார். உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 95வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள மண்டேலாவின் இல்லத்தில் வைத்தே அவர் உயிரிழந்தார். அவர் உயிர் துறக்கும் தருவாயில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவருடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மண்டேலா வைத்தியசாலையிலிருந்து கடந்த செப்டெம்பர் மாதம்தான் வீடு திரும்பினார். வீடு திரும்பியதில்ருந்து அவரது இல்லத்திலேயே அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவரது மகள் மகஸிவே மண்டேலா, தனது தந்மை அவரது மரணப்படுக்கையில் மிகவும் தைரியமான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று உயிரிழிந்தார்.

                                   பொது வாழ்க்கையில் சகாப்தம்.. 
           தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கடம்.. மண்டேலாவின் கதை!
 


ஜோஹன்னஸ்பர்க்:
பொது வாழ்க்கையில் சகாப்தமாக திகழ்ந்த நெல்சன் மண்டேலா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சங்கடங்களைத்தான் சந்தித்தார் என்பது சோகமானது. கிட்டத்தட்ட 30 வருடங்கள் அவர் தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருந்தார். அதில் 25 வருடங்கள் சிறையிலேயே கழிந்து போனது. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தோஷத்தை விட சங்கடங்களையும், சர்ச்சைகளையும், வேதனைகளையும்தான் அதிகம் சந்தித்துள்ளார்.

13 வயதேயான ஜெனானி மண்டேலா
மணடேலாவின் செல்லமான கொள்ளுப்பேத்திதான் 13 வயதான ஜெனானி மண்டேலா. அவரது மரணம் மண்டேலாவை சிதறடித்து விட்டது.







9 மாதத்தில் மரணித்த முதல் மகள்
அதேபோல மண்டேலாவின் முதல் மனைவி எவர்லின் டோகோ மாசேவுக்கும், மண்டேலாவுக்கும் பிறந்த முதல் மளான மெகாஸிவி பிறந்து 9 மாதமே ஆகியிருந்த நிலையில் உயிரிழந்தார்.






மூத்த மகன் கார் விபத்தில் பலி
அதேபோல மண்டேலாவின் மூத்த மகன் மடிபா தெம்பிகிலே 1969ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார். அப்போது மண்டேலா சிறையில் இருந்தார்.







தாயாரின் முகத்தைப் பார்க்க முடியாத துரதிர்ஷ்டம்

அதேபோல மண்டேலா சிறையில் இருந்தபோது அவரது தாயார் மரணமடைந்தார். இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.






எய்ட்ஸ் நோயினால் பலியான இன்னொரு மகன்

அதேபோல மண்டேலாவின் இன்னொரு மகனான மெக்தோ லெவனிகா மண்டேலா, 2005ம் ஆண்டு எய்ட்ஸ் வந்து இறந்தார்.







வின்னியால் வந்த தலைவலி
மண்டேலாவின் இரண்டாவது மனைவியான வி்ன்னி மண்டேலாவும் அவருடன் இறுதி வரை சேர்ந்து வாழவில்லை. இந்த வாழ்க்கையும் கசப்பாகவே முடிந்து போனது மண்டேலாவுக்கு. 1996ம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர்.




3வது மனைவி
1998ம் ஆண்டு கிரேக்கா மெச்சலை திருமணம் செய்தார் மண்டேலா. அவரது முதல் கணவர் மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மெச்சல் ஆவார். இந்தத் திருமணமும் கூட சலசலப்பை ஏற்படுத்தியது அப்போது.






                                                                                                நன்றி 
                                                                                         தட்ஸ் தமிழ்