ஈழத்துச் சிதம்பரத்தில் சிவன் கோவில் தேர்த் திருவிழா.. பக்தர்கள் பரவசம் !!!

யாழ்ப்பாணம்:யாழ்ப்பாணம் நகரிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் காரைநகர் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழத்துச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் காரைநகர், திண்ணைபுரம் சிவன் கோவிலில் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை (17.12.13) விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை தொடங்கி சிறப்பு பூசைகள், அபிசேகம் இடம்பெற்று திருவாசகம் ஓதுதலுடன் வசந்த மண்டபப் பூசையினைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு நடராஜப்பெருமான் பரிவாரமூர்த்திகளுடன் எழுந்தருளினார்.



ஈழத்தில் உள்ள அனைத்து நாதஸ்வர, தவில் வித்துவான்கள் கானமழை பொழிய முற்பகல் 10 மணியளவில் பஞ்சரத பவனி தொடங்கியது. பிற மாவட்டங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் தேர்த் திருவிழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.