கோப்புக்காட்சி |
அரசாங்கத்தின் ஆதரவில் புதிதாக தமிழீழ
விடுதலைப் புலிகள் உருவாகக் கூடுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.
விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள புதிதாக உருவாக்கும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வோதய ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த கால தமிழ் அரசியல் தலைவர்கள் எதிர்நோக்கிய நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் விடுதலைப் பலி கமாண்டர் ஒருவரின் தலைமையில் புலிகள் இயக்கம் மீள இயங்கவுள்ளதாகவும் அரசாங்கம் அதற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் படையினர் உள்நோக்கங்களின் அடிப்படையில் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எங்களது காணிகள், வர்த்தக ஸ்தாபனங்கள், தொழில் வாய்ப்புக்கள் தட்டிப் பறிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வித உள்நோக்கமும் இல்லாவிட்டால் வடக்கில் காவல்துறையினரை அதிகளவில் ஈடுபடுத்தி, படையினரை ஏன் அரசாங்கத்தினால் குறைக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெற்கைச் சேர்ந்த மனிதாபிமான சாதாரண சிங்கள மக்கள் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் பேசும் தமிழர்களும், முஸ்லிம்களும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என அவர் சுடடிக்காட்டியுள்ளார்.
எனினும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள மயமாக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.