சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பயங்கரவாத இயக்கம் என்று முத்திரையிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிந்ததற்குக் காரணம் என்று அயர்லாந்தில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் முடிவுக்கு வந்தததாக அத்தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்ற பேராசிரியர் முனைவர் பால் நியூமேன் கூறினார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்கப் படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த 14 (பொங்கல் தினத்தன்று), 15ஆம் தேதிகளில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணை செய்தது.
இந்த விசாரணையில் கலந்துகொண்டு, நேரிடையாக சாட்சியமளித்தவர்களில் ஒருவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர் முனைவர் பால் நியூமேன். இலங்கைக்குச் சென்று சமூக ஆய்வு மேற்கொண்டவர். அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயத்தில் இவர் அளித்த சாட்சியம் மிக மிக முக்கியமானதாகும்.
சென்னை வந்திருந்த பால் நியூமேனை தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா. அய்யநாதன் பேட்டி கண்டார்.
தமிழ்.வெப்துனியா.காம்: சிறிலங்க அரசை போர்க் குற்றவாளி என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளது என்றும் அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் தனது ஆரம்பக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது. எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இக்குற்றங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது?
முனைவர் பால் நியூமேன்: போர் நடந்தபோது மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்க படையினர் கனரக
WD
இவைகள் மட்டுமின்றி, தங்களிடன் சிக்கிய தமிழ் இளைஞர்களை சிறிலங்கப் படையினர் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். உண்மையானவைதான் என்று நீருபணமான அந்த ஆதாரமும் அளிக்கப்பட்டது.
இதேபோன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி, கற்பழித்த ஒரு மணி நேர வீடியோவும் இத்தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியைத்தான் ஆங்கில தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பியது. இவைகளின் அடிப்படையிலேயே சிறிலங்க அரசு போர்க் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது.
தமிழ்.வெப்துனியா: மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against Humanity) எவ்வாறு நிரூபிக்கப்பட்டது?
பால் நியூமேன்: திட்டமிட்டப் படுகொலைகள், சித்ரவதை, கற்பழிப்பு, கருவுறச் செய்தல், அழித்தல் (Extermination), விருப்பத்திற்கு எதிராக மக்களை தடுத்து வைத்தல், இடம் பெயரச் செய்தல், மக்களை அழிக்கும் நோக்குடன் உணவு, குடி நீர் அளிக்காமல் திட்டமிட்டு செயல்படுவது ஆகிய நடவடிக்கைகளை மானுடத்திற்கு எதிரான குற்றங்களாக ஐ.நா.வின் பிரகடனம் கூறுகிறது. சிறிலங்க படையினரின் இப்படிப்பட்ட குற்றங்களால் பாதிப்பிற்குள்ளான பல தமிழர்கள் இத்தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்தார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, பல சிங்களவர்களும் சாட்சியமளித்தார்கள். இவர்கள் அனைவரிடமும் இன் கேமரா புரசீடிங்ஸ் என்று கூறப்படும் இரகசிய விசாரணை நடத்தப்பட்டது. சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதிகளுக்கே சென்று நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இந்த சாட்சிகளில் பலர் இறுதிக்கட்டப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இராணுத்திடம் பிடிபட்டு பிறகு முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்கள்.
தமிழ்.வெப்துனியா: சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றுக் குறித்து மேலும் விசாரணை நடந்த வேண்டும் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளதே, ஏன்?
பால் நியூமேன்: இனப் படுகொலை என்பது மிகப் பெரிய குற்றச்சாற்று. அது குறித்து ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதாலும், அதில் சிறிலங்க அரசும் தன் நிலையை எடுத்துக் கூற வாய்ப்பளிக்க வேண்டும் என்பதாலும், இனப் படுகொலைக் குற்றத்தை உறுதி செய்யாமல் மேலும் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
நன்றி: வெப் துனியா ஊடகம்.