தமிழீழ கால்பந்தாட்ட அணி பங்கேற்கும் சர்வதேச போட்டி நேரடி ஒளிபரப்பு !

 லண்டன்: 
தமிழீழ கால்பந்தாட்ட அணி (TEFA) பங்கேற்கும் முதல் சர்வதேசப் போட்டி இன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது. தமிழீழ உதைபந்தாட்டக் கழகம் என்ற பெயரில் சர்வதேச அணி ஒன்றை ஈழத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த அணி சர்வதேச அணிகளுடன் மோதும் கால்பந்தாட்டப் போட்டி இன்று முதல் டின்வோல்ட் ஹில்லில் நடக்கிறது.
 
சென். ஜோன்ஸ், ஐல் ஒஃப் மான் (St.John's, Isle of Man) எனும் இடத்தில் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழீழ உதைபந்தாட்டக் கழகத்துடன் Sealand F.A., Alderney F.A., Raetia F.A., Occitania F.A. and St. John's United F.A. ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.
 
 தமிழீழ உதைபந்தாட்ட அணி இன்று Isle of Man என்ற இடத்தில் மற்றைய அணிகளுடன் மோதும் நிகழ்வை நேரடி ஒளிபரப்பு மூலம் அனைவரும் பார்க்க ஈழத் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. www.tamileelamfa.org, www.tyouk.org ஆகிய தளங்களில் நேரடி ஒளிபரப்பைக் காணலாம். மேலும் விவரங்களுக்கு media@tyourk.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
 
 இத்தகவலை அணியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.