யுத்த நிறைவின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக 12 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களே பல்வேறு இடங்களிலும் தொழில் புரிவதை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
எரிபொருள் நிரப்பு மையங்கள், தேனீர் சாலைகள்,, பழக்கடைகள், நகை விற்பனை நிலையங்கள் உட்பட பல இடங்களில் இத்தகைய சிறுவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமின்றி பஸ் தரிப்பு நிலையங்கள் மற்றும் தொடரூந்து நிலையங்களிலும் இத்தகைய சிறுவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய சிறுவர் தொழிலாளர்கள் குறித்து மாவட்ட தொழில் திணைக்களம் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமை குறித்தும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.