பிரிட்டனின் வட அயர்லாந்தில் மணமக்கள் வேடமணிந்த 750 பெண்கள் ஓட்ட நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர். இது ஒரு புதிய உலக சாதனை எனக் கருதப்படுகிறது. 91 வயதான பெண் முதல் தனது சொந்த திருமண வரவேற்பு வைபவத்திலிருந்து நேரடியாக கலந்துகொண்டவர் வரை பல்வேறு தரப்பினர் இதில் கலந்துகொண்டனர். நலநிதியமொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக வட அயர்லாந்தின் டெரி நகரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. லண்டன், லிவர்பூல் உட்பட பிரிட்டனின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பெண்கள் இதில் பங்குபற்றினர்.