பிரித்தானிய மஹாராணி பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்க மாட்டார்
பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகால பொதுநலவாய நாடுகள் அமர்வில் முதல் தடவையாக பிரித்தானியா மஹாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக அமர்வுகளில் மஹாராணி பங்கேற்பதனை தவிர்த்துள்ளார் என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறெனினும் பிரித்தானிய மஹாராணிக்கு பதிலாக இளவரசர் சார்ள்ஸ் இந்த அமர்வில் பங்கேற்பார் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மனித உரிமை மீறல்கள் காரணங்களுக்காக அமர்வை புறக்கணிக்குமாறு சில நாடுகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டு;ளளது.
எனினும், மனித உரிமை காரணங்களுக்காக பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மஹாராணியின் உடல் நிலையை கருத்தற் கொண்டோ அல்லது இளவரசருக்கு கூடுதல் பொறுப்புக்களை வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலோ இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
54 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு தடவையும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கூடி ஆராய்வது வழக்கமாகும்.
2011ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்ற அமர்வுகளில் மஹாராணி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற ஏற்பாடாகி வரும் பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராணிக்கு பதிலாக பிரித்தானிய இளவரசர் சால்ஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் மகாராணி ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தை பங்கிக்காம் அரண்மனை அறிவிக்கவில்லை.
இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறில்களினால் அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை அங்கத்துவநாடுகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் மகாராணி இதில் பங்கேற்க கூடாது எனவும் தொடர்ச்சியாக அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் பிரித்தானிய மகாராணியின் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
1973ஆம் ஆண்டுகளின் பின்னர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருப்பது இதுவே முதன்முறையாகும். எனினும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமருன் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வதில் எவ்வித மாற்றமும் இல்லையெனக் கூறப்பட்டுள்ளது.