முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சிப் பேரணி ! அலையெனத் திரளுமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு!

லண்டனில் பிரமாண்டமான அளவில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சிப் பேரணிக்கான ஏற்பாடு! அலையெனத் திரளுமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு!

லண்டனில் எதிர்வரும் 18 ஆம் நாள் பிரமாண்டமான அளவில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 4 ஆம் ஆண்டு நினைவெழுச்சி பேரணியில், பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்க தயாராகுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்திருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களுக்கும் உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்தும் அதேநேரம் பல்வேறு அரசியல் நோக்கங்களை இலக்கிற் கொண்டும் அத்தினம் பேரணியும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகப் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிற் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

எமது சுதந்திர எழுச்சியும் அதன்பாலான போராட்டமும் முள்ளிவாய்க்கால் கடல் மண்ணினுள் புதைக்கப்பட்டாதாக எமது எதிரிகளும், விரோதிகளும் இறுமாப்படைந்தனர். ஆயினும், தமிழர்களது விடுதலைத் தீ மேலும் சுடர்விட்டு வீறு கொண்டெழும் என்பதை தமிழ்நாட்டிலும் புலத்தில் வாழும் எமது உறவுகளின் அண்மைக் கால எழுச்சி நடவடிக்கைகள் மூலம் உலகுக்குப் பறை சாற்றி தொடர் முயற்சிகளை முன்னெடுத்து வருவதில் தங்கள் அனைவரினதும் பங்களிப்புக்கள் பாராட்டுக்குரியவை.

அடிமைத் தடைகளை அறுத்து எம்மை விடுவிக்கும் பயணம் நீண்டு செல்லும் இக்காலப்பகுதியில், சுதந்திர தாகத்தைத் தணியாது உயிர் ஊட்டவும் தமிழர் வாழ்வில் ஆறாத வடுவை ஏற்படுத்திச் சென்ற முள்ளிவாய்க்கால் அனர்த்த நிகழ்வினை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும், இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் அரச குடும்பத்தினரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது முடிவை மாற்றிக்கொள்;ளுமாறு பாரிய அழுத்தத்தை கொடுக்கவும்இ ஈழத்தில் தொடர்ந்து நடைபெறும் நில ஆக்கிரமிப்பு மற்றும் தமிழினப் படுகொலை என்பவற்றை வேற்றின மக்களுக்கு வெளிப்படுத்தவும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தவும் மற்றும் தமிழகத்தில் மாணவரதும்; மற்றும் மக்களதும் எழுச்சிக்கு ஆதரவு வழங்கும் பொருட்டும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை பாரிய அளவில் நாம் 18.05.2013 (சனி;க்கிழமை) அன்று நடாத்தவுள்ளோம்.

அத்தினம் இப்பேரணி நண்பகல் 01மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) இல் ஆரம்பித்து பிற்பகல் 05மணிக்கு Waterloo Place (Closest station: Piccadilly Circus)இல் நிறைவுறும

இதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகைதர இருக்கும் பல அரசியல் மற்றும் கலை உலகப் பிரமுகர்கள் உரை ஆற்றுவர்;.

இலங்கை அரசுக்;கெதிரான அனைத்துலக சுயாதீன விசாரணை பன்னாட்டரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இத்தருணத்தில், தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் அணிதிரண்டு வீதிகளில் இறங்கி இவ் விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. குறிப்பாகஇ ஐ. நா உள்ளக அறிக்கையின்படி முள்ளிவாய்க்காலில் 70,000க்கும் மேலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை தடுத்து நிறுத்துவதற்கு தவறியதாக, ஐ.நா கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்றுக்;கொண்டிருக்கும் நிலையில், ஓர் அனைத்துலக சுயாதீன விசாரணையை நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு ஐ.நா கொண்டிருக்கின்ற தார்மீக பொறுப்பினை, தமது உயிர்களை அர்ப்பணித்த எமது அத்தனை உறவுகளின் சார்பாகவும் அன்றைய பேரணியில் கலந்து வலியுறுத்தும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.

அதேவளை, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோரது அறிவிப்புக்கெதிராக தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி அவர்களது முடிவினை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கும் ஒரு பெரும் கடப்பாட்டையும் இச் சந்தர்ப்பத்தில் சுமந்து நிற்கிறார்கள்.

அத்துடன், தமிழ் மக்கள் அமைதியாக இருந்து விட்டால், அது முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ் மக்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு விடுதலைக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டனர்; என்று தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுவிடும் அபாயகரமான நிலைமை இருக்கிறது.

அரசியல் மற்றும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கப்பால் மக்கள் ஆயிரக்கணக்கில் வீதிகளில் இறங்கி நீதியும் விடுதலையும் வேண்டி போராடும் போது தான், உலகின் கவனம் எம்மை நோக்கி திரும்புவதுடன், நீதியும் சுதந்திரமும் அடையும் வரை உலக தமிழர்களின் விடுதலை வேட்கையும் போராட்டமும் ஓயாது என்ற முக்கியமான செய்தி அதிகார மையங்களை சென்றடையும் என்பதுடன் தமிழ் மக்களை கலந்தாலோசிக்காத அல்லது அவர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யாத எந்த ஒரு தீர்வும் வெற்றி பெறாது என்ற உண்மையையும் உணர்த்த முடியும்.

2009 இல் இலட்சக் கணக்கில் அணி திரண்டு எழுச்சி கொண்டது போல், எதிர்வரும் மே 18 அன்றும் இப் பேரணி பெரும் எழுச்சி காண்பதற்கு பிரித்தானியாவில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டெழுமாறு அன்புடனும் உரிமையுடனும் வேண்டிக்கொள்கிறோம்.



<<- முன் பக்கம்