87 நாட்கள் இடைவெளியில் பிறந்து கின்னஸ் படைத்த இரட்டை குழந்தைகள் !!!

அயர்லாந்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 87 நாட்கள் இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது, அக்குழந்தைகளுக்கு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெரும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தை சேர்ந்தவர் மரியா ஜோன்ஸ் எல்லியாட்(34).இவர் கர்ப்பிணியாக இருந்தபோது, அவரது கருப்பையில் இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்தது தெரியவந்தது. மரியாவின் பிரசவத்திற்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்னரே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அப்போது அவருக்கு குறை பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரட்டை குழந்தைகளில் மற்றொரு குழந்தை தாயின் கருப்பையில் இருந்தது. முதல் குழந்தை பிறந்து 87 நாட்கள் கழித்து இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இதனால், பிறப்புக்கு மத்தியில் மிக அதிக நேரம் இடைவெளி (87 நாட்கள்) உடைய இரட்டை குழந்தைகள் என்னும் கின்னஸ் சாதனை பட்டியலில் இவர்கள் இடம்பெற உள்ளனர். தற்போது பிறப்புக்கு மத்தியில் மிக அதிக நேரம் இடைவெளி கொண்ட இரட்டையர்கள் என்னும் கின்னஸ் பட்டத்தின் உரிமையாயர்கள் அமெரிக்காவை சேர்ந்த இரட்டையர்கள். இவர்கள் பிறப்புக்கு இடையே 84 நாட்கள் இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது.