பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியுடன் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று கல்லூரி நண்பர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணகைளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கஸகஸ்தான் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட அஸ்மாட் தஸகோவா, டயஸ் கடியர்பாயி ஆகியோரும், ரொபல் பிலிப்போஸ் ஆகியோரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுடன் இந்த சந்தேக நபர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விசாரணைகளை உரிய முறையில் நடாத்த ஒத்துழைப்பு வழங்காது பொய்யான தகவல்களை வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. பொஸ்டன் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.