ஏர்-இந்தியா விமானங்களில் 20 கிலோ எடையுள்ள பொருட்களை பயணிகள் இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இனி 5 கிலோ குறைத்து 15 கிலோ எடை பொருட்கள் மட்டும் எடுத்து செல்ல முடியும். அதற்கு மேல் எடுத்து செல்லப்படும் தலா ஒரு கிலோ எடை பொருளுக்கு ரூ.200 முதல் ரூ.250 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த நடைமுறை அடுத்த வாரம் கடை பிடிக்கப்பட உள்ளது. ஏர்-இந்தியா விமானத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களின் விமானங்களும் இதே நடைமுறையை விரைவில் பின்பற்ற உள்ளது.
நன்றி
T24NEWS