மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்
சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி
பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பாதுாப்பற்ற முறையில் சிறுவர்கள் பயணிக்கும்
போது விபத்துக்கள் நேர்வதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
இருவர் மாத்திரம் பயணிக்க கூடிய மோட்டார் சைக்கிளில் மூவர் அல்லது நால்வர் பயணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள டொக்டர் சிசிர கோதாகொட, அநேகமான சந்தர்ப்பங்களில் வேகமாக செல்லும் வேளையில் சிறுவர்களே விபத்துக்குள்ளாவதாக தெரிவித்தார்.
இதனால் சிறுவர்களுக்கு தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டிப்பர் வாகனம் மற்றும் கொள்கலன்கள் காலை வேளையில் பயணிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் இதனால் இரவு வேளையில் அவை பயணிப்பதற்கான சட்டமும் விரைவில் அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.