அமெரிக்காவிலுள்ள ஓகியோ பகுதியில் அமைந்துள்ள லூக்காஸ்வில்லே என்ற பகுதியை சேர்ந்த ஸ்டீவ்சுமித்(வயது 46) என்பவர் தனது தோழி ஒருவரின் 6 மாத குழந்தையை கற்பழித்து கொலை செய்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையின்பொழுது ஸ்டீவ்சுமித் கூறுகையில், குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டேன், வேண்டுமென்றே நான் இந்த கொலை செய்யவில்லை. எனவே எனக்கு மரண தண்டனை விதிக்ககூடாது என்று வாதாடினார்.
ஆனால் அதனை ஏற்காத நீதிபதி, அவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஸ்டீவ் சுமதித்துக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். தந்தையை மரண தண்டனை அறைக்கு அழைத்து சென்றபோது அவரது மகள் கதறி அழுத சம்பவம் பார்ப்பவர் மனதை உருக வைத்தது.